அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றது உச்சநீதிமன்றம் – வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..!

திமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவை அளித்து இருந்தனர். இதில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பு பதில் அளித்து இருந்ததால், அதற்கு விளக்கம் அளிக்க இன்று உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை அளித்து இருந்தது.

இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதன்ஷு துலியா ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. பின்னர், ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று, நவம்பர் 30ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள், ஓபிஎஸ் தரப்பு பதில் மனு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா வைரமுத்து மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்பு . மேல்முறையீடு , நவம்பர் 30ஆம் தேதி , கடத்த வாரம் இபிஎஸ் பதில் மனு , ஓபிஎஸ் மனு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு.