இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே வேலை – கோவை தொழில் அமைப்பினர் வலியுறுத்தல்..!!

கோவை புதிதாக பணிக்கு சேரும் தொழிலாளர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என, வேலை வழங்குவோருக்கு கோவை தொழில் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம், , கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது:
கொரோனா தொற்று பரவலின் போது நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் உள்ளிட்டவற்றின்போது அரசு அதிகாரிகள் ஏற்கெனவே தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை பெற்றுள்ளனர். தொழில் நிறுவனத்தினரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தொழிலாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தெரிவித்துள்ளனர். புதிதாக தொழிலாளர்களை பணியில் சேர்க்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க தொழில்முனைவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.