பஸ் மோதி நடந்து சென்று கொண்டிருந்த பெண் பலி

கோவை சிங்காநல்லூர் நீலீ கோணாம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள்( வயது 37) கட்டிட தொழிலாளி.)இவர் நேற்று கோவை. திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக உடுமலையை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சர்க்கரையன் (வயது 43)மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.