அன்னூரில் முதுவலி என்று தனியார் மருத்துவமனைக்கு சென்ற வாலிபர் பலி- தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு.!

அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22) இவர் டிராவல்ஸ் ஓட்டுநராக ஒரு வருடமாக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை முதுகு வலி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சங்கீத் குமார் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிரணவ்)தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி செலுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது .இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சங்கீத் அன்னூரில் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் (பிரனவ் )தனியார் மருத்துவமனை தவறான சிகிச்சை அளித்ததால் மாரடைப்பு ஏற்பட்டு சங்கீத் உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுவரை அவருக்கு இதுமாதிரி எந்த பிரச்சனையும் இல்லை என கூறும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சங்கீத் உயிரிழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த சங்கீத் உடல் அன்னூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டது. பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் தவறான ஊசி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கஞ்சப்பள்ளியில் உள்ள சங்கீத்குமார் வீட்டில் அவரது உறவினர்கள் நண்பர்கள் குவிந்து வருகின்றனர்.