கோவையில் பைக்கில் அதிவேகமாக செல்பவர்ளை பிடிக்க” ட்ரோன்” பயன்படுத்த திட்டம் – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் மாநகர காவல் துறையிடம் 2 டிரோன் உள்ளது இதை எப்படி இயக்குவது ?என்பது பற்றி பயிற்சி அளிக்கும் திட்டம் இன்று தொடங்கியது.ஒவ்வொரு காவல் நிலையம் ஒருவருக்கு முதல் கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் மாநகர காவல் துறையில் அதிக பேருக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ளும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கலவரம் நடைபெறும் பகுதிகளை கண்காணிக்கவும் முடியும் .குறிப்பாக சில ஆறு, ஏரி, குளங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை கண்காணிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2 ” டிரோன்” வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. சாலைகளில் அதிவேகமாக செல்பவர்களை பிடிக்க காவல்துறை வாகனங்களை பயன்படுத்தினால் சில நேரங்களில் விபத்து நடப்பதற்கு ஏதுவாக அமையும். இதனால் அங்கு ட்ரோன் கருவி பொருத்தப்பட்டால் அதிவேகமாக செல்வோர்களை பிடிப்பதற்கு இலகுவாக அமையும் .எனவே விரைவில் லட்சுமி மில் சந்திப்பில் ட்ரோன் பொறுத்த திட்டமிட்டுள்ளோம். பொதுவாக இந்த ட்ரோன் கருவிகளை பயன்படுத்த 3 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பச்சை மண்டல பகுதியில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மஞ்சள் நிற பகுதியில் காவல்துறையின் அனுமதி பெற்று தான் பயன்படுத்த வேண்டும். சிவப்பு நிறப் பகுதியில் டிரோன் கருவிகளை பயன்படுத்தக் கூடாது.பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்கள் கொடுத்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.