முதல் இரையை வேட்டையாடிய நமீபியாவிலிருந்து வந்த 2 ஆண் சிறுத்தைகள்.!

மீபியாவிலிருந்து இந்தியா வந்தடைந்த சீட்டா எனும் சிறுத்தைகள் தனது முதல் இரையை வேட்டையாடியுள்ளது.

இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவின், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு செப்டம்பர் 17 அன்று வரவழைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அவற்றை சரணாலயத்திற்குள் விடுவித்தார்.

செப்-17 இலிருந்து தனிமைப்படுத்தலுக்கு பிறகு இரண்டு ஆண் சிறுத்தைகள் கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் முதல் இரையாக மானை வேட்டையாடியதாக வனத்துறை அதிகாரி உத்தம் குமார் சர்மா தெரிவித்தார்.

விலங்குகள் பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்த்தப்படும்போது ஏதேனும் தொற்று இருந்தால் அவை மற்ற விலங்குகளுக்கு பரவாமல் இருக்கிறதா? என்று சோதிக்க ஒரு மாத அளவில் தனிமைப்படுத்தப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.