சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி நிர்வாணமாக சிக்கிய வாலிபரால் பரபரப்பு 

சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி நிர்வாணமாக சிக்கிய வாலிபரால் பரபரப்பு 
 கோவை அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த வாலிபர் நிர்வாணமாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 கோவையை சேர்ந்த 16 வயது சிறுமி, சித்தி வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிறுமி மற்றும் உறவினர்கள் வீட்டில் கதவை பூட்டாமல் படுத்து தூங்கினர். இந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணியளவில், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் ( 27) என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் அருகே சென்று அவரது ஆடைகளை அகற்றி, பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த சிறுமி இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். இதனால் பாலன் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டார். அங்கு, சிறுமியின் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது சித்தி, சிறுமி ஆடைகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நிர்வாணமாக சிக்கிய வாலிபர் இதையடுத்து உறவினர்கள் வீடு முழுவதும் தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு பாலன் நிர்வாணமாக நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பாலனை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவரை பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பாலன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.