வேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி 2 பெண்கள் காயம்- ஓட்டுநருக்கு தர்ம அடி..!!

இன்று உடுமலையில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுந்தராபுரம் வழியாக கோவை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து(SRK) அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரத்தினம் கல்லூரி அருகே, பேருந்திற்கு முன் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இருசக்கர வாகனம் பேருந்தின் முன் பகுதிக்கு அடியில் சிக்கியது. ல் காயமடைந்தவர்களுக்கு அப்பகுதி இருந்த பொதுமக்கள் முதலுதவி அளித்தனர். இதனிடையே பேருந்தை வேகமாக இயக்கிய ஓட்டுநரை வாகன ஓட்டி ஒருவர் அவரது ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். அதனை அங்கிருந்து ஒருவர் அவரது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப் ல் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.