கிழிந்த நோட்டு,கள்ளநோட்டு வைத்து ரூ.3.28-கோடி நூதன மோசடி: கோவை பாங்க் ஆப் பரோடா மேலாளர், பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட 6-பேர் மீது சிபிஐ வழக்கு..!!

கோவை பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3.28-கோடி மோசடி: மேலாளர், பாதுகாப்பு காவலர் உள்ளிட்ட 6-பேர் மீது சிபிஐ வழக்கு..

கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பாங்க் ஆப் பரோடா வங்கியில் ரூ.3.28 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட ஆறு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை நஞ்சப்பா சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு கடந்த 27.12.2021-அன்று இந்திய ரிசர்வ் வங்கி பழைய சேதமடைந்த நோட்டுக்களை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வங்கியில் இருந்து ரூ.70 கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கி மேலாளர் அனுப்பி வைத்தார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெறப்பட்ட பணத்தை ஆய்வு செய்தபோது அதில் கள்ள நோட்டுகள் மற்றும் கிழிந்து சேதமடைந்த நோட்டுகள் மற்றும் ஒரு கோடி வரை பணம் பற்றாக்குறையாக இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக அதில் ரூ.98 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், 54,700 ரூபாய் சேதமடைந்த நோட்டுகள், பற்றாக்குறையாக ஒரு கோடியே 84 ஆயிரத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் என மொத்தம் இரண்டு கோடியே 83 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோவை வந்த ஆர்.பி.ஐ அதிகாரிகள் கோவையில் அதிகாரிகள் வங்கியில் சோதனை நடத்தினர். அதில் இதனைத் தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வங்கியில் தணிக்கை செய்த போது வங்கியில் பணம் வைக்கபடும் பாதுகாப்பு பெட்டகத்தில் 1,06,600 ரூபாய் கள்ள நோட்டுகளாகவும், 9,200 ரூபாய் சேதமடைந்த நோட்டுகளும், வங்கிக் கணக்கில் பற்றாக்குறையாக 44 லட்சத்து 4200 என மொத்தம் 45 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. ஆக மொத்தம் 3 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 800 ரூபாய் மோசடி செய்யப்பட்டது இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் தணிக்கையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும், காவலாளி கனகராஜ் ரொக்க பணத்தை வரிசைப்படுத்துவதும், பாதுகாப்பு பண பெட்டகத்தின் அருகில் அடிக்கடி சென்று வந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த வங்கியில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை அடிக்கடி வங்கி பணப்பாதுகாப்பு அறைக்குள் சென்ற, வங்கி அதிகாரி செல்வராஜ் பாதுகாப்பு, மேலாளர் ராஜன்,அலுவலர் ஜெயசங்கரன், அக்கவுண்டன்ட் ஸ்ரீகாந்த் ஆகியோர் அடிக்கடி பணத்தை மாற்றி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மண்டல துணை பொது மேலாளர் ககதால் என்பவர் சிபிஐ-ல் புகார் அளித்தார். அதில் புகார் வங்கியின் அதிகாரிகளான செல்வராஜ், மேலாளர் ராஜன், ஜெயசங்கரன்,காவலாளி கனகராஜ்,ஸ்ரீகாந்த் ஆகியோர் பாதுகாப்பு பண பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து கையாடல் செய்துள்ளதாகவும், பழைய நோட்டுகளுக்கு பதிலாக கிழிந்த நோட்டுகளை வைத்ததோடு, கள்ள நோட்டுகளை வைத்து மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீகாந்த் மற்றும் செல்வராஜ் ஆகியோரின் கணக்களில் சந்தேகத்துக்குரிய பல்வேறு பண பரிவர்த்தனைகள் காணப்படுவதாகவும் இருவரும் மற்ற வங்கிகளில் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்திருப்பதாகவும், வெளி நபர் ஒருவர் இவர்களுக்கு உதவியதாகவும், வங்கி கணக்கிற்கு வந்த தொகை, பாதுகாப்பு பெட்டிக்கு கொண்டு செல்லாமல் பாதி பாதியாக சேதமடைந்த நோட்டுகளை வைத்து மோசடி செய்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் முக்கிய குற்றவாளியான செல்வராஜ், மேலாளர் ராஜன் உட்பட ஆறு பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.