தனியார் நிறுவனத்தில் புகுந்த பாம்பு: அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்ததாக கிரீன் கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் அமீன் உடனடியாக அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறும் போது :

தற்பொழுது கோடை காலம் என்பதால், வெப்பம் தாங்காமல் பாம்பு வெளிவருவது அதிகரித்து உள்ளது. அது மட்டுமின்றி அதன் வாழ்விடப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததால் அவை எங்கு செல்வது என்று தெரியாமல் வீடுகள், மக்கள் குடியிருப்புகள் ஆகிய பகுதிகளில் புகுந்து விடுகிறது. மேலும் பாம்புகளை கண்டால் அதனை அடித்து கொன்று விடாமல் உடனடியாக கிரீன் கேர் அமைப்பு மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.