தனியார் நிறுவனத்தில் ரூ.3.65 லட்சம் பண மோசடி- ஊழியர் மீது வழக்குப்பதிவு ..!

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள ராமகிருஷ்ணாபுரம் ஸ்ரீவாரி கார்டனை சேர்ந்தவர் சபரி கைலாஷ் ( வயது 34 )இவர் அந்த பகுதியில் ” பாரத் டிரேடர்ஸ்”என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவரிடம் கிருஷ்ணகுமார் என்பவர் 3 ஆண்டுகளாக ஊழியராக வேலை செய்து வந்தார்.இவர் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் 3 லட்சத்து 65 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சபரி கைலாஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார்.போலீசார் ஊழியர் கிருஷ்ணகுமார் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.