கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்கச் செயின் அபேஸ்..!

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன், நகர் புது தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமணி. இவரது மகள் கனகவல்லி ( வயது 28) இவர் நேற்று தனியா டவுன் பஸ்சில் எருக்கம் பெனியில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் அணிந்திருந்த18 கிராம் தங்கசெயினை காணவில்லை. கூட்ட நெரிசல் யாரோ பெண் கொள்ளையர் திருடி விட்டனர் .இது குறித்து கனகவல்லி ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.