கோவை பைனான்ஸ் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி -கையும் களவுமாக சிக்கிய நகை தொழிலாளி ..!

கோவை சாய்பாபா காலனி என். எஸ் . ரோட்டில் தனியார் சொந்தமான பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு ஆர்.எஸ்.புரம் சீனிவாச ராகவன் வீதியைச் சேர்ந்த ராமு ரெட்டி ( வயது 39) என்பவர் 319.9 கிராம் தங்க நகைகளை கொடுத்து பணம் கேட்டார்.அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜசேகருக்கு அந்த நகைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. நகைகளை பரிசோதித்து பார்த்தபோது பித்தளை நகைகள் என்பது தெரியவந்தது.இதையடுத்து ராமி ரெட்டியை ராஜசேகர் கையும் களவுமாக பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் ராமி ரெட்டி வைசியாள் வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்ப்பதும்,அந்தக் கடையின் உரிமையாளர் விக்னேஷ் என்பவர் இந்த போலி நகைகளை அவரிடம் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது. ராமி ரெட்டி கைது செய்யப்பட்டார்.போலி நகைகளை கொடுத்து அனுப்பிய நகைக்கடை அதிபர் விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.