12 வயது சிறுமியை 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம்..!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது தந்தை குடிப்பழக்கம் உடையவர் .தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த சிறுமியை ஆசைவாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் செய்யப்பட்டது. மைய அதிகாரி கிருஷ்ணகுமாரி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா இது தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையில்அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது . தொண்டாமுத்தூர் முல்லை நகரை சேர்ந்த பெயிண்டர் மதன் என்பது தெரிய வந்தது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் .மேலும் சதாசிவம் என்பவரும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொண்டாமுத்தூர்,முல்லை நகரைச் சேர்ந்த பாதிக்கபட்ட சிறுமியின் உறவினர் மதன் ( வயது 27 )சிறுமியின் தந்தையின் நண்பர் சதாசிவம் (வயது 48)ஆகியோரை கைது செய்தார்.15 வயது சிறுவனை தேடி வருகிறார்கள்.12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது|