2- ம் திருமண ஆசையில் கேடி பெண்களிடம் நகை, பணத்தை இழந்த 60 வயது முதியவர்.!!

சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 60. இவரது மனைவி இறந்ததால் மறு திருமணத்திற்காக வரன் தேடும் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இதைப் பார்த்த திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவர் ஆனந்தனிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி சித்ரா தனது அக்கா முத்துலட்சுமியுடன் திருவொற்றியூர் வந்த சித்ரா ஆனந்தன் வீட்டில் இரவு தங்கி உள்ளார். அப்போது காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். ஆனந்தன் மயங்கி இருக்கும் நேரத்தில் அவரை கிள்ளிப் பார்த்தும் எழுந்திருக்காதால் உஷாரான கேடிகள் சித்ராவும் முத்துலட்சுமியும்  பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை வந்த சுவடு தெரியாமல் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மறுநாள் காலை தாமதமாக எழுந்த ஆனந்தன் பீரோ திறந்து இருந்ததை கண்டு திடுக்கிட்டார் . உள்ளே  இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருப்பதையும் மொபைல் போனும் மாயமாகி இருப்பதை கண்டு திருவொற்றியூர் போலீசில் புகார் கொடுத்தார்.  வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசாரும் மதுரை கீரைத்துறை போலீசார் உதவியுடன் குற்றவாளிகளின் இருப்பிடத்தை அறிந்தனர். அதன்பின் மதுரை அனுப்பான்டி சென்று நகை திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சித்ரா வயது 38 முத்துலட்சுமி வயது 44 என இருவரையும் கைது செய்தனர் .அவர்களிடம் இருந்த 15 சவரன் தங்க நகைகள் 2 லட்சத்து 80 ஆயிரத்தை ரொக்கம்  பறிமுதல் செய்தனர். பலமான விசாரணைக்கு பின் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற ஆஜருக்கு பின் புழல் சிறையில் அடைத்தனர்..