கோவையில் பெய்து வரும் பலத்த மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சிறுவாணி அணையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 22-ம்தேதி 20 மில்லி மீட்டர் மழையும், 23 -ம் தேதி 47 மில்லி மீட்டர், 24 – ம் தேதி 22 மில்லி மீட்டர், 25 ம் தேதி 48 மில்லி மீட்டர், நேற்றைய நிலவரப்படி 95 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது .நேற்று முன்தினம் மட்டும் 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து பெருமளவு அதிகரித்தது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.07அடி உயர்ந்தது. தற்போது அணையில் 38.87 அடிக்கு தண்ணீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து குடிநீருக்காக நாள்தோறும் 56.80எம்.எல். டி. தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது .இந்த மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் அணை விரைவில் 44 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம் .இவர் அவர்கள் கூறினார்கள்.
சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு







