கோவை புதிய பாஸ்போர்ட் அதிகாரியாக பாவனா குமாரி பொறுப்பேற்பு

கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாககடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் சதீஷ்.இவர் தற்போது மேகாலயா மாநிலம், ஷில்லாங்கிற்கு மாறுதலாகி சென்றுள்ளார். இதை தொடர்ந்து டெல்லியில் பணியாற்றி வந்த பாவனா குமாரி கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் .புதிய பாஸ்போர்ட் அதிகாரி பாவனா குமாரிக்கு பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.