கோவை இடையர் வீதியில் தங்க நகை வியாபாரம் செய்து வருபவர்கள் சஞ்சய்,, சைபுல், இவர்களிடம் அந்த பகுதியில் நகை பட்டறை நடத்தி வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுல்பிகர் ஹுசேன் (வயது 45) ரூபேல் (வயது 29) ஆகியோர் 450 கிராம் தங்கத்தை பெற்றுக்கொண்டு தாமிரம் உள்ளிட்ட உலோகங்கள் கலந்த போலி தங்க நகைகளை செய்து கொடுத்துள்ளனர். இந்த நகைகளை பரிசோதனை செய்த போது அது போலி என்பது தெரியவந்தது. மோசடி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ 50 லட்சம் இருக்கும். இதை தொடர்ந்து நகை வியாபாரிகள் கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.போலீஸ் கமிஷனர் ரம்யா பாரதி உத்தரவின் பேரில், கோவை தெற்கு பகுதி துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில் , இன்ஸ்பெக்டர்கள் தங்கம், வெற்றிச்செல்வி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது .இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சுல்பிகர் ஹுசைன் ,ரூபேல் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 265 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர் .கைதான அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரூ 50 லட்சம் தங்கம் மோசடி: வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது!









