கோவை : தீபாவளி பண்டிகை வருகிற 8 ந் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி வீட்டு உபயோக பொருட்கள் நகைகள் புத்தாடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் கடைவீதியில் அலை மோதுகிறது .குறிப்பாக டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளில் விடுமுறை நாட்களில் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு வழிப்பறி சம்பவம் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக ஒப்ணக்கார வீதி கிராஸ் கட் ரோடு கடைவீதி பகுதிகளில் 5 இடங்களில் கோபுரங்கள் அமைத்து அதில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அந்த கோபுரத்தில் போலீசார் நின்று கண்காணித்து வருகிறார்கள். தற்போது கூடுதலாக மேலும் 5 இடங்களில் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது .அதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது .
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :-கோவை மாநகர பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடப்பதை தடுக்க ஒப்பணக்கார வீதியில் 3 இடங்கள், கடைவீதி, கிராஸ் கட் ரோடு,நஞ்சப் பா ரோடுகடைவீதிபகுதிகளில் தலா2 இடங்கள்,ஒப்பணக்கார வீதியில் மற்றொரு பகுதியில் ஒரு இடம் என்று மொத்தம் 10 இடங்களில் கோபுரங்கள் அமைக்கப்படஇருந்தது. தற்போது இதில் 5 இடங்களில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் போலீசார் பணி அமர்த்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள் .இன்னும் கூடுதலாக 5 இடங்களில் விரைவில் அமைக்கப்படும். இது தவிர கூட்ட நெரிசலில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வருவார்கள்.போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்







