வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல 35 வது ஆண்டான இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுமார் 55 விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் வழக்கமாக விசர்ஜனம் செய்யப்பட்டு வரும் நடுமலை ஆற்றில் அனைத்து சிலைகளும் நேற்று முன்தினம் மேள வாத்தியம் முழங்க நகர்பகுதி வழியாக ஊர்வலமாகச் சென்று விசர்ஜனம் செய்யப்பட்டது இந்து முன்னணியின் நகர பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கோவை கோட்டைச் செயலாளர் அசோக்குமார் கருத்துரை வழங்க மாநிலச் செயலாளர் சி.எம் அண்ணாத்துரை சிறப்புரையாற்றினார் கண்கவர் அலங்காரத்தோடு நடைபெற்ற இவ்விழாவில் ஒன்றிய தலைவர் ரமேஷ்,ஒன்றிய பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், பாஜக மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல், வால்பாறை பாஜக மண்டல் தலைவர் செந்தில் முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்ரமணி, இந்துமுன்னணி மகளிரணியினர் மற்றும் நிர்வாகிகளும் உடனிருந்தனர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையில் 300 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்