30 மணி நேரம் காத்திருப்பு… 5 கி.மீ வரை நீளும் வரிசை… புரட்டாசி சனிக்கிழமைக்காகத் திருமலை திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாள் மாதம் என்பது பக்தர்களின் கருத்து. அதுவும் திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருமலையில் புரட்டாசி நவராத்திரியை ஒட்டி பிரம்மோற்சவமும் நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். இதை ஒட்டிக் கடந்த வாரம் திருமலையில் ஒரு நாளைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவராத்திரி முடிவடைந்த நிலையில் அக்டோபர் 4 மற்றும் 5 ம் தேதிகளில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்குள்ளாகவே இருந்தது.

இந்நிலையில் நாளை (8.10.22) புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை வருவதையொட்டி பக்தர்கள் திருமலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். அக்டோபர் 5 ம் தேதி மாலை முதல் அதிகரிக்கத் தொடங்கி பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அளவில் இருந்தது. தற்போது தரிசனத்துக்கான பக்தர்களின் வரிசை சுமார் 5 கி.மீ நிற்கிறது. மேலும் தரிசனம் செய்ய 30 மணி நேரம் ஆகலாம் என்கிறார்கள்.திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை  | Wandering devotees at the Tirupati Temple, 4 km long line |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News ...

நாராயண கிரி கார்டனில் இருக்கும் அனைத்து ஷெட்களும் பக்தர்களால் நிரம்பிய நிலையில் வரிசை வெளியே தொடங்கி நேற்று காலையிலேயே சிலா தோரணம் வரை நீண்டது. பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்தாலும் அதிகரிக்கும் கூட்டம் இன்னும் நிலைமையைச் சிக்கலாக்கும் என்கிறார்கள்.

எனவே திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் இந்த சூழலை மனதில் கொண்டு முடிவெடுத்து வருமாறு திருப்பதி தேவஸ்தானம் நேற்று அறிக்கை வெளியிட்டது.