விஜய் ‘ரோடு ஷோ’

க்.4ஆம் தேதி முதலமைச்சர் விஜய் 114 கிலோ மீட்டர் தொலைவு ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், அந்த தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரத்தின் இறுதி நாளான அக்.4ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாராபுரம் ருத்ராவதி துவங்கி, குண்டடம் தாராபுரம், மூலனூர், தாசர்பட்டி வரை என 114 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோடு ஷோ வாகன பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.