கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோனியம்மன் கோயிலில், உண்டியல் காணிக்கைப் பணம் திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாகவே கோயில்களில் முறைகேடு நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் உலக புகழ்பெற்ற கோவை கோனியம்மன் கோயிலிலும் உண்டியல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.கடந்த 15ஆம் தேதி கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்ட நிலையில், தற்காலிக உண்டியலில் இருந்த பணத்தைக் கோயில் அதிகாரிகளின் துணையுடன் ஊழியர்கள் சிலர் அபகரித்ததாக புகார் எழுந்தது. கோயிலுக்கு சென்று கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் உண்டியல் எண்ணப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.









