திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள குறிச்சிக்கோட்டை ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலைமாடசாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் 45 -ம் ஆண்டு கொடை விழா வருகிற 31-ந் தேதி (திங்கள்கிழமை) 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.1 – ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு அன்னதானமும், 9 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், காலை 11 மணிக்கு வில்லிசை, பகல் 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், பகல் 3 மணிக்கு சிவனடைந்த பெருமாள் கணியான் மகுடம் பாடுதல், மாலை 6:00 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு அன்னதானம்,இரவு 11 மணிக்கு அலங்கார பூஜை ,இரவு 11:30 மணிக்கு பிரம்ம சக்தி அம்மனுக்கு யாகம் வளர்த்தல், சுடலைமாடசாமிக்கு கணியான்மகுடம் பாடுதல், இரவு 12 மணிக்கு படைப்பு பூஜை, இரவு 1:30 மணிக்கு கணியான் கை, நாக்கு கை வெட்டி சுவாமிக்கு ரத்தம் கொடுத்தல், இரவு 2 மணிக்கு சுவாமிக்கு திறளை உணவு கொடுத்தல், இரவு 2:30 மணிக்கு அருள் வாக்கு மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது . நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த ஏ முத்துக்குமாரின் மகுடம் வாசிக்கும் நிகழ்ச்சியும், நாகர்கோவில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பரமேஸ்வரிகுழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கொடை விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிறுவனர், எஸ் .டி. வடிவேல் பூசாரியின் மகன், கோவில் தர்மகர்த்தா வி. மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
அருள்மிகு சுடலை மாடசாமி திருக்கோவில் 45 -ம் ஆண்டு கொடை விழா








