தமிழ்நாடு முழுவதும் உள்ள 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது. அதன்படி முதல் கட்டமாக மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் ஆகிய 5 கோவில்களில் நேற்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது அமலுக்கு வந்தது. இதையொட்டி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்திலும், மலை மேல் பகுதியில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் செல்போன் ஒப்படைக்க ஒரு கவுண்டரும், திரும்ப வாங்க ஒரு கவுண்டரும், அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கோயிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை மீறி கோவிலில் செல்போன்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும். எனவே பக்தர்கள் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை முக்கிய கோவில்களில் செல்போன் எடுத்துச் செல்ல தடை









