தமிழகமே எதிர்பார்த்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியாகிறது

மிழகத்தில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கஜானா காலி ஆகிவிட்டது எனவும் கடந்த கால ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளதால் திட்டங்களை நிறைவேற்ற சற்று கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களுக்கான மகளிர் இலவச பேருந்து பயணம் போன்றவைகள் தொடரும் நிலையில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளையும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.ஆனால் இதில் பயிர் கடன் தள்ளுபடி மட்டும் முழுமையாக செய்யப்பட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் போராட்டங்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையை தானே வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது தற்போது திமுக வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.