கோவை மாவட்டம் வால்பாறையில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிற்கிணங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்போடு பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுக்காக்கும் வகையில் அதற்க்கான அவசர ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இராமகிருஷ்ணசாமி தலைமையில் நகராட்சி ஆணையாளர் குமரன், வட்டாட்சியர் அருள் முருகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தற்போது துவங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மண்சரிவு மற்றும் மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரியமுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் இருந்து செயல்படவேண்டும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். வால்பாறை நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்..
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு சப் கலெக்டர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்









