கோவை மாவட்டம் காடம்பாறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்பூனாச்சி பழங்குடியினர் கிராமத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மிகவும் சிரமத்துடன் வசித்துவரும் மறைந்த கந்தனின் மகள் நாகம்மாள் வயது 13 இவர் எட்டாம் வகுப்பு படித்துள்ளார் இவரின் தம்பி முருகன் வயது 11 இவர் ஆறாம் வகுப்பு படித்துள்ளார் இவர்கள் இருவரும் வீட்டில் போதிய வசதி இல்லாத நிலையில் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளனர் இந்நிலையில் அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தச்சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படையின் உதவி ஆய்வாளர் ரெஜினாபானு தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படையினர் இடை நின்ற மாணவர்களின் தாயிடம் விவரம் கேட்டறிந்து அவரின் அனுமதியோடு அழைத்து வந்த இரு மாணவர்களுக்கும் உடுத்துவதற்கு உடைகளை வாங்கிக்கொடுத்து வால்பாறையில் உள்ள நேதாஜி உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்தனர் சிங்கப்பெண் அதிரடிப் படையினரின் இந்த செயல் அனைத்து தரப்பினரிடத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது
இடைநின்ற மாணவர்களுக்கு உதவி பள்ளியில் சேர்த்த சிங்கப்பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு






