கோவை விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை

கோவை:  குடியரசு துணைத் தலைவர் சி.பி.ரா தாகிருஷ்ணன் நாளை ( புதன்கிழமை) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை விமான நிலையம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கி ழமை காலை முதல் 48 மணி நேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறியிருப்பதாவது:-

இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ் ணன் நாளை புதன்கிழமைகோவை மாநகருக்கு வருவ தையொட்டி, கோவை உப்பி லிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில், ஜிகேஎன்எம் மருத்து வமனை, ஹோப்ஸ், கொடி சியா, பீளமேடு, சிட்ரா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம் பாளையம் மற்றும் சுற்றுவட் டாரப் பகுதிகளில் இன்று செவ்வாய்க் கிழமை முற்பகல் 11 மணி முதல் சிவப்பு மண் டலங்களாக அறிவிக்கப்பட் டுள்ளன. சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந் தப் பகுதிகளில் அனைத்து ஆளில்லா வான்வழி வாகனம் மற்றும் ஆளில்லா விமான அமைப்புகள், ட்ரோன்கள் ஆகியவற்றை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விதி முறையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.