23 ஆண்டு கால சட்ட போராட்டம் நடத்திய பெண்ணுக்கு கிடைத்த வெற்றி

பிரிட்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் பரபரப்பான விவாகரத்து வழக்குகளில் ஒன்றான வர்ஷா கோஹிலின் சட்டப் போராட்டம், 23 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்ஷா கோஹில், 2002-ஆம் ஆண்டு தனது கணவர் பத்ரேஷ் கோஹிலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது, 2,70,000 பவுண்டுகள் மற்றும் ஒரு காரை மட்டுமே ஜீவனாம்சமாக பெற்றார். ஆனால், தனது கணவர் உண்மையான சொத்து விவரங்களை மறைக்கிறார் என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு, பத்ரேஷ் கோஹில் நைஜீரிய முன்னாள் ஆளுநர் ஒருவருடன் இணைந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இது தொடர்பாக நடத்தப்பட்ட குற்றவியல் விசாரணையில், அவர் மில்லியன் கணக்கிலான சொத்துக்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 2011-இல் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.