சமூக வலைதளங்களில் தற்போது பல்வேறு கருத்துக்களை பொதுமக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மேலும் ஒரு சிலர் மத மோதல்கள், ஜாதி மதங்களை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். மேலும் சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்., எனவே இது போன்ற வீடியோக்கள் கருத்துக்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் சமூக வலைதள கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர்கள் மணிகண்டன் முத்தையா அடங்கிய குழுவினர் கோவை மாநகரில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சமூகவலை தளங்களை கண்காணிக்கும் போலீஸ் குழு









