கள்ளச்சந்தையில் மது விற்பனை – இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதி அருகே உள்ள மதுபான கடையில், நள்ளிரவு மற்றும் சட்டவிரோத நேரங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கடும் புகார்கள் எழுப்பப்பட்டன.

​இந்தச் சட்டவிரோத விற்பனையைத் தடுக்கத் தவறியதாக, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கடமையில் மெத்தனம் காட்டியதற்காக ஆய்வாளர் மோகன் தாஸை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.