9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம்- லாரி டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது மாணவியை பால்ராஜ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்தார். இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி மாணவியை அவர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இந்த தொல்லை அத்துமீறி போகவே மாணவி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து அவர் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 9-ம் வகுப்பு மாணவியை நிர்வாண படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் பால்ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கருப்பையா கவுண்டர் வீதியை சேர்ந்த கன்னியப்பன் (31). ஆட்டோ டிரைவர். மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார். இந்த விவகாரம் கன்னியப்பன் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியின் கன்னத்தில் அடித்தார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் 12-ம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கன்னியப்பன், அவரை தாக்கிய அவரது மனைவி மகாலட்சுமி (25) ஆகியோரை கைது செய்தனர்