உலக புலிகள் தின விழிப்புணர்வு பேரணி..!!

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் அறிவுரையின்படி அட்டகட்டி வன உயிரின மேலாண்மையுடன் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து புலிகளை காப்பது அவசியம் மற்றும் நெகிழியால் உண்டாகும் தீமைகள் குறித்தும் வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பேரணி அட்டகட்டி பயிற்சி மையம், ஆளியாறு பேருந்து நிலையம் முதல் ஆழியாறு சோதனைச்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.