உதகையில் கட்டிட மேற்பார்வையாளர் அலட்சியத்தால் 70 அடி உயரத்திலிருந்து மண் சரிந்து 6 பெண்கள் பலியான சோகம் – உரிமையாளர் உள்பட 4 பேர் சிறையில் அடைப்பு.!!

நீலகிரி மாவட்ட லவ்டேல் காந்தி நகரில் பகுதியில் விவசாய நிலங்களில் தனியார் விடுதி கட்டுமான பணி பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.  இந்தப் பகுதி முழுவதும் தேயிலை தோட்டம் மற்றும் விவசாயப் பகுதியாகும்.  இந்த இடத்தில் இதுபோன்ற தனியார் விடுதி கட்டும் பணியால் இயற்கை பேரழிவு அபாயம் ஏற்படுவதை உணராமல் அனுமதி வழங்கப்படுகிறது . இந்தத் தனியார் விடுதியின் 30 அடிக்கு மேலான பதில் சேவர்கள் கட்டப்பட்டுள்ளன. இதுவும் மழைக்காலங்களில் சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து வழியாக உயிர் சேதங்கள் ஏற்படும் என்று பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நீலகிரி மாவட்டம் முழுவதிலும் பல இடங்களில்  தகுந்த முறையில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.  நீலகிரி மாவட்டம் மழை பிரதேஷமாக உள்ளதால் பல இடங்களில் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் சட்டங்கள் விதிமுறைகள் நடைமுறையில் இருந்தும் சமீப காலங்களாக நீலகிரி உதகையில் மண் சரிவு ஏற்படும் இடம் என்று பாராமல் நீலகிரி நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் இந்த கட்டிடம் கட்டுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறை பாதிப்புக்கு உள்ளாகும் என்று பல அதிகாரிகளிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் பகுதி மக்கள் கூறுகின்றனர்.  அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் தற்போதைய இரண்டு வார்டு கவுன்சிலர்கள் இந்தப் பகுதியில் இத்தகைய தனியார் கட்டிடங்கள் கட்டுவது நன்றாக தெரியும். முன்கூட்டியே கட்டிடம் கட்டுவதற்கு முன் அப்பகுதிகளை ஆய்வு செய்ய தவறி விட்டார்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றன. 70 அடிக்கு மேலாக இருந்த பழைய கட்டிடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறை இருந்துள்ளது.  அதற்குக் கீழாக தான் தனியார் கட்டிட பணிகள் நடைபெற்று வந்துள்ளது. கட்டிட மேற்பார்வையாளர்
முன்கூட்டியே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தை இடித்து இருந்ததால் இதுபோன்ற உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றன. ஒரு கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் மேற்பார்வையாளர் ஒரு இடத்தில் பணிபுரியும் பொழுது பழைய கட்டிடங்கள் சேதம் ஏற்பட்டால் இடிந்து விழும் என்று முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். ஆனால் 70 அடிக்கு மேலாக உள்ள அந்த பழைய கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து விடும் என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள் .இதைக் கண்டு கொள்ளாத கவுன்சிலர்கள், தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் மேற்பார்வையாளர் முக்கிய காரணமாகும் என்று கண்ணீருடன் சொந்தங்களை இழுந்த குடும்பங்கள் தெரிவிக்கின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதிப்பதும் இல்லாமல், கட்டிட கட்டுமான பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.

நீலகிரி மாவட்டத்தில் இனிவரும் நாட்களில் சட்டத் திருத்தங்கள் கடுமையாக கொண்டு வந்து அனுமதி மீறி கட்டப்படும் கட்டிடங்கள்
இயற்கை வளத்தை அழித்து வரும் தனியார் விடுதி உரிமையாளர்கள் எங்கு பார்த்தாலும் சுற்றுலா காட்டேஜ்கள்,விவசாய நிலங்களில், நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களில், பலவிதமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழிவதோடு பூமி அதிர்ச்சி நாட்களில் உயிர் இழப்பு அதிகரிக்கும் என்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வனத்துறை, நகரத் திட்டமிடல் அலுவலகம், உதகையில் நடந்த விபத்தில் 70 அடிக்கு மேலாக உள்ள கழிவறையின் கான்கிரீட் கட்டிடத்தின் தூண்கள்
அடித்தளம் உறுதியில்லாததால் திடீரென்று ஏற்பட்ட மண் சரிவு விபத்தில் கட்டிட தொழிலாளர்களான ஆறு பெண்கள் மண்ணில் புதைந்தன. இதை அறிந்த பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல்துறை மற்றும் பொதுமக்கள் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி இருந்த கட்டிட பணியாளர்களை மீட்டனர். ஆனால் 70 அடி உயரத்திலிருந்து காங்கிரீட் சுவர்கள் மண்களும் அதிகமாக சரிந்து விழுந்ததால் ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை ஜேசிபி எந்திரம் மூலம் ராட்சத காங்கிரட் சுவர்களை அப்புறப்படுத்தி உயிர் இழந்தவர்களையும் உயிருக்கு போராடியவர்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். உயிர் இழந்த பெண்களின் விவரம் 36 ராதா.y,  38 சக்கிலா, 30 முத்துலட்சுமி, 36 உமாபதி  என 6 பெண்கள்
மற்றும் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
காவல் துறையினரும், மீட்புத் துறையினரும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விபத்து சம்பந்தமாக லவ்டேல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Cr.no: 8/24 u/s 288,336,337,304. (ii) IPC . இந்த விபத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்காத நிலத்தின் உரிமையாளர் காண்ட்ராக்டர் சூப்பர்வைசர் மற்றும் மேஸ்திரி ஆகியோர்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். 1) பிரிட்ஜோ – கட்டிட உரிமையாளர், 2) பிரகாஷ் – கட்டிட ஒப்பந்ததாரர்,
3) ஜாகீர் அஹமத் – மேற்பார்வையாளர், 4) ஆனந்தராஜ் – மேற்பார்வையாளர் மண் சரிவில் பலியான குடும்பத்தினர் பகுதி மக்கள் கொந்தளித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.  இத்தகைய சம்பவம் ஏற்பட்டும் இரண்டு கவுன்சிலர்களும் வராததால், மிகுந்த கோபத்தோடு ஆத்திரத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பகுதி முழுவதும் நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சம்பவ இடத்திற்கு நேரில் பார்வையிட வந்த பாஜகவின் மகளிர் அணியினர் கூறியதாவது விவசாய நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அரசாங்கம் அனுமதி வழங்கி உள்ளது. மற்றும் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி இயந்திரம் இயக்கப்படுவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது போன்ற ஒரு தனியார் விடுதி கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது கேள்விக்குறியாக உள்ளது, கழிவறை கட்டிடம் இடிந்து விழுவதற்கு ஜே சி பி பயன்படுத்துவது ஒரு காரணம், மற்றும் முன்கூட்டியே கட்டிட மேற்பார்வையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர் கவனக்குறைவு, அலட்சியம் காரணம் என்றனர், மண் சரிவு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஊரில் நஷ்டஈடு வழங்க வேண்டும் மற்றும் விபத்துக்கு காரணமானவர்கள் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க தவறினால் பாஜகவினர் தொடர்ந்து கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்தனர்? அதிமுக மாவட்ட செயலாளர் காப்பச்சி வினோத் செய்தியாளர்களிடம் கூறியதாவது லவ்டேல் காந்திநகர் பகுதியில் நடந்த விபத்தில் பலியான குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் என்றார், இதுபோன்ற சம்பவங்கள் நீலகிரி மாவட்டத்தில் நடப்பதற்கு நகராட்சி தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் கையூட்டு வாங்கி அனுமதி இன்றி கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் விவசாய நிலங்கள் மலை சரிவு பகுதிகள் என்று பாராமல் அனுமதிப்பதால் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடப்பதால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார், மற்றும் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என்றார். உடன் மாவட்டத் துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர், தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரளாக கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதி இல்லாத கட்டிட மேற்பார்வையாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஒரு கட்டிடப் பணிகள் செய்வதற்கு முன்னதாக விபத்துகள் ஏற்படுவதற்கு முன்னதாக ஆய்வு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும் மற்றும் நகராட்சி நிர்வாகம் இதுபோன்ற பகுதிகளை ஆய்வு செய்து ஊறிய ஆவணங்கள் இல்லாத பணிகள் செய்பவர்கள் மீதும் கட்டிடப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் கட்டிடங்களை கட்டும் கட்டிட உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் போன்றவர்களை கண்டறிந்து கடுமையான சட்டங்களையும் நடவடிக்கைகளும் கொண்டு வர வேண்டும்.  நீலகிரி முழுவதிலும் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் காட்டேஜ்கள் தனியார் விடுதிகள் இயற்கையின் அழகை சீர்குலைப்பதோடு வரும் தலைமுறைக்கு பேரழிவை ஏற்படுத்தும் மக்களிடமிருந்து நீலகிரி மாவட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்று தன்னார்வளர்கள் எச்சரிக்கை???