திருமணமாகி 2 பெண் குழந்தைகளுக்கு தாய்… கணவன் உயிரோடு இருந்தும் சொகுசாக ஊரை ஏமாற்றி உல்லாசமாக வாழ்ந்த 42 வயது பெண் ஜெயிலில் கம்பி எண்ணுகிறாள்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆவடி தாம்பரம் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கணவன் துணையோடு இளம் வயது ஆண்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில் உலகத்திலேயே இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம்
ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரியலூர் மாவட்டம் சாத்து மங்கலத்தைச் சேர்ந்த ராமதாஸின் மகன் கோபி ராஜன் வயது 33 கேட்டரிங் டிப்ளமோ படித்துவிட்டு சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணத்திற்கு பெண் அமையாததால் கோபி ராஜனின் பெற்றோர்களின் அறிவுரைப்படி தினத்தந்தி நாளிதழில் மணப்பந்தல் பக்கத்தில் தாய் தந்தை இல்லாத அனாதைப் பெண் சிவஸ்ரீ இந்த விளம்பரத்தை பார் என்று கூறியதால் அவள் குறிப்பிட்டு இருந்த மொபைல் போன் நம்பரில் கோபி ராஜன் பேசினார். உங்களை நேரில் பார்க்கிறேன் என்று கூறி சிவஸ்ரீ என் உயிரையே உங்களுக்கு தந்து விடுகிறேன் என மனம் உருகி பேசினாள். கோபி ராஜனும் சிவஸ்ரீயிடம் ன் நெருக்கமாக பழகினார்கள். சிவஸ்ரீ யும் தான் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவிப்பதாகவும் தன்னால் உயிர் வாழ முடியாத அளவிற்கு பிரச்னை உள்ளது. தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதை நம்பி கோபி ராஜனும் வாழ்ந்தால் உன்னோடுதான் தாலி கட்டுவது உனது கழுத்தில் தான் என மயங்கி விட்டான். சிவ ஸ்ரீயும் நமக்கும் சரியான இளிச்சவாயன் கிடைத்துவிட்டான் என்ற சந்தோசத்தில் தன்னுடைய அக்கவுண்ட் நம்பரை கொடுத்து விட்டாள். அந்த முட்டாளும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சிவஸ்ரீயின் வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரை போட்டு உள்ளார் . திருமணத்தைப் பற்றி பேசிய போதெல்லாம் சிவஸ்ரீ தவிர்த்து வந்துள்ளாள். சந்தேகம் அடைந்த கோபி ராஜன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு எனக் கேட்டுள்ளார். கோபி ராஜனின் நம்பர்களை பிளாக் செய்து உள்ளாள் அதனால் கோபி ராஜன் 1930 ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பல்வேறு கோணங்களில் சிவ ஸ்ரீயை கண்காணித்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆவடி மோரை பகுதியை சேர்ந்தவள் என்றும் அவளது ஒரிஜினல் பெயர் புவனேஸ்வரி என்றும் திருமணம் ஆகி ராஜசேகரன் என்ற பிராடு கணவனும் இருக்கின்றான் 2 பெண் குழந்தைகளும் உள்ளது. திருமண தகவல் மையம் என்பதையும் நடத்தி வருகிறாள். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து பெண்களின் மோக வலையில் விழ வைப்பது தான் இவளுடைய டெக்னிக் போன் மூலம் பேசி பணத்தை கரைப்பது தான் இவளுக்கு கை வந்த கலை  இவளை போலீசார் கைது செய்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..