ஒவ்வொரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள்… மொத்தம் 1,66,000 மரக்கன்றுகள்.. பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா ட்விட்..!!

பிஎல் தொடரின் பிளேஆப் போட்டியில் டாட் பந்துகளுக்கு மரக்கன்றுகள் நடப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தனது 5-வது வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் ஆரம்பம் முதல் தனது இருப்பை தக்க வைத்துக்கொண்ட இரு அணிகளாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் சிறந்து விளங்கின. இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலபரீட்சையாக நடந்த போட்டியில் சென்னை வெற்றியை பதிவு செய்தது.

பிளேஆப் சுற்று முதல் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆட்டத்தின் போது டாட் பந்துகளுக்கு பதிலாக மரம் வடிவிலான குறியீடு இடம் பெற்றிருந்தது. 4 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 332 டாட் பந்துகள் கணக்கிடப்பட்டன. குவாலிபயர் ஒரு போட்டியில் மட்டும் 84 டாட் பந்துகள் கணக்கிடப்பட்டுள்ளன. நேற்றைய போட்டியின் டாட் பந்துகள் மற்றும் மரங்களின் எண்ணிக்கை குறித்து பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.