கோவையில் தேர்தல் பாதுகாப்புக்கு 4,363 துணை ராணுவம் : 45 ரவுடிகள் கைது – போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை,சிறப்பு காவல் படை, ஊர்காவல் படை, துணை ராணுவம் உட்பட 4,363 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.இது தவிர 10 வேன்களில் அதி விரைவு படையினர் நகர் முழுவதும்24 மணி நேரமும் வாகனத்தில் ரோந்து சுற்றி வருவார்கள். தேர்தலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் 45 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோவையில் உள்ள ஓட்டல்களிலோ, மண்டபங்களிலோ தங்கி இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்ததும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அதற்கான பாதுகாப்பு அறைகள் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் ரயில் பாதைகளை ஒட்டியவாறு 103 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..