கோவையில் விதவிதமாக விற்பனையாகும் கஞ்சா: சாக்லெட்டுகள் பறிமுதல்
கோவை ரத்தனபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையிலான போலீஸ் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது சங்கனூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை சோதனை செய்தனர். சோதனையில் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட்டுகளை பார்த்து உள்ளனர். அந்த சாக்லெட்டை பார்த்து போது குழுந்தைகள் சாப்பிடம் சாக்லெட் அல்ல போதை பிரியர்களின் பிரியமான கஞ்சா சாக்லெட் என்பதனை தெரிந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கஞ்சா சாக்லெட் வைத்திருந்த நபர் பாலாஜி என்றும் காய் கறி மார்கெட்டில் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தன. மேலும் தலைவன் சுரேஷ் என்பதும் கூட்டாளிகள் 15 பேருக்கு ரத்னபுரி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் உத்திரபிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு கோயமுத்தூருக்கு ரெயில், லாரிகளில் கடத்தி வருகின்றனர். இதற்க்கு முன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் வடமாநில இளைஞர் கேத்தன் குமார் என்பவனை கைது செய்து கிலோ கணக்கில் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்தனர்.
Leave a Reply