கோவை பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு..!

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம்,குமரன் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் .இவரது மனைவி சரஸ்வதி (வயது 60 ) இவர் நேற்று கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒண்டிபுதூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் .சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து சரஸ்வதி ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.