புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, குற்றப் பின்னணி கொண்ட நூற்றுக்கணக்கான நபர்கள் சுற்றித் திரிந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.போராட்ட களத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 2,873 பேரைப் பிடித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதில் 980 பேர் பல்வேறு தீவிரமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.101 பேர் கொலை வழக்குகளிலும், 62 பேர் கொலை முயற்சி வழக்குகளிலும் தொடர்புடையவர்கள். 61 பேர் பாலியல் வன்கொடுமை, 25 பேர் பெண்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் 6 பேர் போக்சோ வழக்குகளில் தொடர்புடையவர்கள். 284 பேர் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளிலும், 135 பேர் சங்கிலிப் பறிப்பு வழக்குகளிலும் பிடிபட்டுள்ளனர். 229 பேர் சட்டவிரோத ஆயுதச் சட்ட வழக்குகளிலும், 67 பேர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளிலும், 19 பேர் கடத்தல் வழக்குகளிலும் ஆளானவர்கள்.கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 65 போராட்டக்காரர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் காயமடைந்ததாகத் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
போராட்டத்தின் கலந்துக் கொண்டவர்களில் 2873 பேர் குற்றவாளிகள்







