டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் விற்பனை – நள்ளிரவில் 53 மதுபாட்டில் பறிமுதல்- ஊழியர் கைது..!

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் .காலனி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைசேர்ந்த பார் ஊழியர் கருப்பசாமி ( வயது 38 )கைது செய்யப்பட்டார்.அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த53 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பார்குத்தகைதாரர்கள் முரளி உள்பட 2 பேர் தப்பி ஓடி விட்டனர் .அவர்களை தேடி வருகிறார்கள்.