கூடுதல் குத்தகை பணம் தராத ஆத்திரத்தில் 200 பப்பாளி மரங்களை வெட்டி சேதம்- 4 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை :பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடியை சேர்ந்தவர் வேலாயுதசாமி (வயது 62) இவர் வேளாண்மை துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி பங்கஜம் .இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பெரியவாளவாடியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான சிஞ்சுவாடியில் உள்ள 1.21 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பப்பாளி மரம் வளர்த்து வந்தார். ஆறுமுகம் இந்த இடத்துக்கு கூடுதல் குத்தகை தொகை கேட்டார்.வேலாயுத சாமி கொடுக்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் (வயது 60) விலா மரத்துபட்டி வேல்ராஜ் (வயது 35) கன்னையன் (வயது 34)தண்டபாணி (வயது 38) ஆகியோர் பப்பாளி தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த 200 பப்பாளி மரங்களை அரிவாளால் வெட்டி சாய்த்தனர்.இதன் மதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும்.பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து வேலாயுதசாமி கோமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் தப்பி ஓடிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.