பொள்ளாச்சி வியாபாரியிடம் ரூ 5 லட்சம் கொடுத்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி நூதன மோசடி-முதியவர் கைது..!

பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள, உடைய குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 37) விவசாயி. இவர் கிணத்துக்கடவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒருவர் தொலைபேசியில் இவரிடம் தொடர்பு கொண்டார். தன்னை சண்முகம் என்றும், ஊர்கொழிஞ்சாம்பாறை என்றும் அறிமுகம் செய்து கொண்டார். அவர் தன்னிடம் ஏராளமான கருப்பு பணம் உள்ளதாகவும் , ரூ 25 ஆயிரம் கொடுத்தால் ரூ 50 ஆயிரம் இரட்டிப்பாக தருவேன் என்று கூறினார். இதை நம்பி ராஜேந்திரன் முள்ளு பாடி ரயில்வே பாலத்துக்கு அடியில் சென்றார்.அங்கு நின்று கொண்டிருந்த அந்த நபரிடம் ரூ. 25 ஆயிரம் கொடுத்தார். அதற்கு பதிலாக அவர் ரூ. 50 ஆயிரம் நல்ல பணத்தை அவரிடம் கொடுத்தார்.பின்னர் 2 நாட்கள் கழித்து ரூ. 5 லட்சம் கொண்டு வாருங்கள். அதை ரூ 10 லட்சமாக தருகிறேன் என்று கூறினார் இதை நம்பி ராஜேந்திரன் அவரிடம் ரூ 5 லட்சம் கொடுத்தார்.அதற்கு சண்முகம் 10 லட்சம் இந்த பையில் உள்ளது. இதை வீட்டில் வைத்து தான். எடுக்க வேண்டும்.இங்கு வைத்து எடுத்தால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கூறினார். ராஜேந்திரன் வீட்டில் போய் பார்த்தபோது போலி காகித நோட்டுகள் என்பது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து பாலக்காடு சித்தூர் பக்கம் உள்ள மீனம்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகம் (வயது62) என்பவரை கைது செய்தனர். ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.