கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து வருபவர்கள் இரு சக்கர வாகனம் நிறுத்த 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்க்கிங் மற்றும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேரமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நோட்டமிட்டு காமிராக்கள் இல்லாத பகுதிகளில் திருடர்கள் எளிதாக இருசக்கர வாகனங்களை திருடிச் செல்கின்றனர். இதனை கண்காணிக்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காவலாளிகள் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 2 வாலிபர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் அருகில் வெகு நேரமாக நின்று இருந்தனர். இதனை பார்த்த காவலாளிகள் அந்த 2 வாலிபர்களையும பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட வந்தது தெரியவந்தது. இதை அடுத்து காவலாளிகள் அவர்களை பிடித்து வைத்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply