பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

கோவை காந்திபுரம் முதல் விதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி இவர் கணவர் கனகராஜ் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அருகே உள்ள கணேஷ் லே-அவுட் பகுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு வாடகை வசூல் செய்ய சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி காந்திபுரம் நாலாம் வீதி பாத்திமா சர்ச் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார் இந்நிலையில் அந்த சாலை வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ரத்தினபுரி காவல் நிலைய காவல் துறையினர் அருகில் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.