கோவை பஸ் நிலையத்தில் ஊழியரிடம் பணம் பறித்து தப்பி ஓடிய 2 திருநங்கைகள்- மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மணிக்கெண்ணை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் .இவரது மகன் அந்தோணிராஜ் ( வயது 29) இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவையில் நடந்த தனது நண்பர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் .திருமணம் முடிந்து ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் திருப்பூர் பஸ் செல்லும் வழி தடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் இவரிடம் கையை தட்டி காசு கேட்டனர் ..அவர் தனது மனி பர்சில் இருந்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தார். அப்போது அந்த திருநங்கைகள் அவரிடம் இருந்த பரிசை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்..அந்தோணி ராஜ் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 2 திருநங்கைகளையும் பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார் .போலீசார் அவர்களை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த துருஷா என்ற சுல்தான் அலாவுதீன் ( வயது 37 பல்லடம் செந்தேவி பாளையத்தைச் சேர்ந்த நித்தியா என்ற நாகராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்த பணம் ரூ 6,300 பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.