பைக் திருடிய கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது..!

கோவை பக்கம் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி ( வயது 25 )இவர் தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.இது குறித்து சூலூர் போலீசில் ஹரி புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்கள் 2பேரை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் சரவணம்பட்டி மாதேஸ்வரன் (வயது 19) எர்ணாகுளம் ராகுல் கிருஷ்ணன் (வயது 19) என்பது தெரிய வந்தது.இவர்கள் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் என்ஜின்யரிங் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.