வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகளுக்கு வலை ..!

கோவை பீளமேட்டில் உள்ள டாக்டர், ஜெகநாதன் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 77) இவர் தினமும் அந்த பகுதியில் நடைபயிற்சி செய்வார் .நேற்று அங்குள்ள 4 -வது வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.இது குறித்து பீளமேடு போலீசில் ராஜலட்சுமி புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய 2 பேரை தேடி வருகிறார்கள்.