கடாமான் வேட்டையாடிய 2 பேர் கைது: மான் கறி, மான் தோல், துப்பாக்கி பறிமுதல் – வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையில் வனவர் அப்துல் ரகுமான் வனக்காப்பாளர் கணேஷ்குமார், புகழ் கண்ணன், சண்முகவேல் வன காவலர் சோமு ஆகியோர் கொண்ட குழுவினர் வெள்ளோடு அருகே செட்டியபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது கடாமான் வேட்டையாடிய 2 பேரை கைது செய்தனர் .  அவர்களிடமிருந்து மான்கறி, மான்தோல், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…